திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா.

அம்பையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்99 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பை பூக்கடை பஜாரில்அம்பை நகர திமுக சார்பில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி திருவுருவப்படத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் அம்பை நகர செயலாளரும் நகர சபைத் தலைவருமான பிரபாகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,திமுக நிர்வாகிகள் கணேஷ்குமார் ஆதித்தன்,ஆவின் ஆறுமுகம்,நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முத்துப்பாண்டி,பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம் சங்கர்,பள்ளக்கால் பஞ்சாயத்து தலைவர் சந்துரு,அரசு வக்கீல் காந்திமதிநாதன்,அம்பை கோர்ட் வக்கீல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன்,இளைஞரணி நிர்வாகிகள் தினகர் பாண்டித்துரை,கோதர் இஸ்மாயில்,சரவணன்,கார்த்திக்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நகர கழகத்தின் சார்பில் 21-வார்டு பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு பின் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.நகராட்சி அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது.