செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா எஸ்பி நிஷா பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நிகழாண்டு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து போலீசாருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரம்பூர் காவல் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல் குறித்து பேசினார். இதில் மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார், காவல் ஆய்வாளர்கள் சிவதாஸ், சதீஷ் குமார் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.