உடுமலையில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 17 வாகனங்கள் பறிமுதல்.

உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வாகன தணிக்கையில் ஓட்டுனர் உரிமம் காப்பீடு பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாமல் பலரும் வாகனங்களை இயக்கியது தெரியவந்தது.
இதில் தகுதிச்சான்று காலாவதியாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இயக்கப்பட்டு வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான 2 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 லாரிகள் 2 சுற்றுலா வாகனங்கள் 9 சரக்கு ஆட்டோக்கள் உட்பட 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர்.
CATEGORIES திருப்பூர்