தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தஞ்சை ரயிலடி பகுதியிலிருந்து தொடங்கி வைத்தார் இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் வாயுமண்டலம் காப்போம், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மண்ணுக்குள் மழைநீர் புக மக்காத பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் மஞ்சப்பையை எடுத்துச் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இப்பேரணியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
