BREAKING NEWS

கோவில்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் கிராமத்து சாலையை சீர் செய்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் கிராமத்து சாலையை சீர் செய்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொட்டம்பட்டி பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இக்கிராமத்திற்கு கோவில்பட்டியிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்து தொட்டம்பட்டி போடுவெட்டி புங்கவர் நத்தம் பிள்ளையார்நத்தம் கிராமங்களுக்கு சென்று வருகிறது தொட்டம்பட்டி செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது .

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போதுவரை புதுப்பிக்கப்படவில்லை மேலும் அவ்வழியாக தனியார் பவர் பிளான்ட் இருக்கு கனரக வாகனங்கள் சென்று வருவதால் மேலும் சாலைகள் மோசமடைந்து காணப்படுகிறது இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்ல கூடியவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் எனவே கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைத்து தரவேண்டும் ரகங்கள் வாகனங்களை இயக்க தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )