BREAKING NEWS

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை!! போக்குவரத்து அமைச்சர் அதிரடி!!

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை!! போக்குவரத்து அமைச்சர் அதிரடி!!

பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பேருந்தில் இலவசமாக பயணிக்க பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு முதல் இதனை ஸ்மார்ட் கார்டாக மாற்ற தமிழக அரசு போக்குவரத்து துறை உத்தேசித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்  பயண அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வீட்டிலிருந்து பள்ளி வரை பேருந்தில் இலவச பயணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டு 2022 இறுதிக்குள் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துதுறை  அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  இ-டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜிபே உட்பட ஆன்லைன் முறைகளில்  பணம் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்து

மேலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, நகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான்களும் பேருந்துகளில்  பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட சுமார் 500 பேருந்துகள் தற்போது நடைமுறையில் உள்ள பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங்  முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன்  பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )