BREAKING NEWS

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி யான சேதுமாதவன் மறைவுயடுத்து அவருக்கு அஞ்சலி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

கழகத்திற்கு ஏதாவது சோதனை என்று சொன்னால் எழுச்சி தானாக வரும், அப்படி எழுச்சி இயற்கையாக தானாக ஏற்பட்டிருக்கிறது. தோழர்களுடைய உணர்ச்சி தான் காரணம், உணர்வுகள் அடிப்படையில், லட்சியங்கள் அடிப்படையில், கொள்கையின் அடிப்படையில் உண்டான இயக்கம் என்பதால் அந்த உணர்வு கொஞ்சம் கூட மங்காமல், மறையாமல் உறுதியாக இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பது போல தெரியவில்லை ஆளும்கட்சி செல்வாக்கோடு மக்களின் பேராதரவோடு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் திட்டங்கள் அறிவித்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் பொற்காலம் ஆகும்.

திராவிட இயக்கக் கொள்கைகளை கடைபிடிப்பதில் கொஞ்சம் கூட திமுக சமரசம் இல்லாமல் இருக்கிறது. உறுதியாக இருக்கின்றனர்.

பாஜகவின் எட்டாண்டு ஆட்சியும் திமுகவின் ஓராண்டு ஆட்சியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும்.

அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டு கூறுவது அது அவரது வேலை,
அவர் அந்தக் கட்சியில் உள்ளார் எனவே அவர் சொல்கிறார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு நிர்வாகி மருத்துவர் ரொகையாபேகம் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வைகோவை உற்சாகமாக வரவேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )