தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்கள் 124 பேருக்கு வன நிலப் பட்டா அமைச்சர்கள் வழங்கினர்.

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்களுக்கு கானப்பட்டாவை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

தளி பேரூராட்சிக்குட்பட்ட குருமலை குளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருமூர்த்தி மலை கோவில் மண்டபத்தில் நடந்தது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று மலையில் 9 பேருக்கும் குளிப்பட்டியில்115 பேருக்கும் வணபட்டாக்களை வழங்கினர்.

கலெக்டர் மணி தலைமை வகித்தார் மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் புவியரசு செந்தில்குமார் தலைவர் உதயகுமார் துணைத் தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் ரவி ஒன்றிய குழுத்தலைவர் மகாலட்சுமி முருகன் துணை தலைவர்கள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
