திருப்பூர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் வேளாண்மைத்துறை மூலம் கடத்தூர் ஊராட்சியில் உழவர் ஆர்வலர் குழு ஏற்படுத்தப்பட்டு குழுவின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மடத்துகுளம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி க.கமலவேணி கலையரசு அவர்கள் தலைமையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டது .


நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினரும் கடத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளருமான கு. கலையரசு வேளாண்மை துறை அலுவலர்கள் உழவர் ஆர்வலர் குழுவின் நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES திருப்பூர்
