நிலக்கோட்டை ஜமாபந்தியில் 8 நாட்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கிய அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
நிலக்கோட்டை,ஜூன்.8- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நரியூத்து , கோட்டூர், நிலக்கோட்டை , பச்சைமலையான் கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி , நக்கலூத்து, சிலுக்குவார்பட்டி, நூத்துலாபுரம், பங்களாபட்டி, சின்னமநாயக்கன் கோட்டை ,விளாம்பட்டி, எத்திலோடு, பிள்ளையார்நத்தம் , முசுவனூத்து, கூவனூத்து, வீலிநாயக்கன்பட்டி, சிவஞானபுரம் , போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள் நத்தம், மாலையைகவுண்ட ன்பட்டி, குல்லக்குண்டு, கல்லடிப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை , ஜம்பு துரைகோட்டை, ஒரு தட்டு , பள்ளபட்டி, சேவுகம்பட்டி, சந்தையூர், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, நடகோட்டை , விருவீடு, விராலிமாயன்பட்டி, குன்னுவாரான் கோட்டை , விராலிப்பட்டி, பண்ணைபட்டி ஆகிய 40 கிராம ஊராட்சி மக்களிடம் இருந்து பட்டா மாறுதல் , உட்பிரிவு பட்டா செய்தல் வீட்டுமனை பட்டா, அடங்கல், பல்வேறு கோரிக்கைகளை நடந்த 6 நாட்கள் ஜமாபந்தியில் 732 மனுக்கள் வரப்பெற்றதில் 6 நாட்களில் 172 பேருக்கு நத்தம் வீட்டுமனை பட்டா, முழு புல நிலப்பட்டா வழங்கப்பட்டது. இந்த ஜமாபந்தியில் நிலக்கோட்டை பேரூராட்சி உட்பட்ட என். புதுப்பட்டி சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 30 பேர்கள் உட்பிரிவு செய்து பட்டா கேட்டு இருந்தனர். இதனை உடனடியாக 30 பேருக்கும் பட்டா வழங்க ஆர்டிஓ உத்தரவிட்டார். இதனை ஏற்று நிலக்கோட்டை �நிலக்கோட்டை ஜமாபந்தியில் 8 நாட்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கிய அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
நிலக்கோட்டை,ஜூன். 10-நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
நிலக்கோட்டை,ஜூன்.8- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நரியூத்து , கோட்டூர், நிலக்கோட்டை , பச்சைமலையான் கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி , நக்கலூத்து, சிலுக்குவார்பட்டி, நூத்துலாபுரம், பங்களாபட்டி, சின்னமநாயக்கன் கோட்டை ,விளாம்பட்டி, எத்திலோடு, பிள்ளையார்நத்தம் , முசுவனூத்து, கூவனூத்து, வீலிநாயக்கன்பட்டி, சிவஞானபுரம் , போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள் நத்தம், மாலையைகவுண்ட ன்பட்டி, குல்லக்குண்டு, கல்லடிப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை , ஜம்பு துரைகோட்டை, ஒரு தட்டு , பள்ளபட்டி, சேவுகம்பட்டி, சந்தையூர், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, நடகோட்டை , விருவீடு, விராலிமாயன்பட்டி, குன்னுவாரான் கோட்டை , விராலிப்பட்டி, பண்ணைபட்டி ஆகிய 40 கிராம ஊராட்சி மக்களிடம் இருந்து பட்டா மாறுதல் , உட்பிரிவு பட்டா செய்தல் வீட்டுமனை பட்டா, அடங்கல், பல்வேறு கோரிக்கைகளை நடந்த 6 நாட்கள் ஜமாபந்தியில் 732 மனுக்கள் வரப்பெற்றதில் 6 நாட்களில் 172 பேருக்கு நத்தம் வீட்டுமனை பட்டா, முழு புல நிலப்பட்டா வழங்கப்பட்டது. இந்த ஜமாபந்தியில் நிலக்கோட்டை பேரூராட்சி உட்பட்ட என். புதுப்பட்டி சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 30 பேர்கள் உட்பிரிவு செய்து பட்டா கேட்டு இருந்தனர். இதனை உடனடியாக 30 பேருக்கும் பட்டா வழங்க ஆர்டிஓ உத்தரவிட்டார். இதனை ஏற்று நிலக்கோட்டை நில அளவையர் எட்டு நாட்களில் 30 பேருக்கும் வரைபடம் வரைந்து உட்பிரிவு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு நேற்று 30 பேருக்கும் பட்டா திண்டுக்கல் ஆர்டிஓ பிரேம்குமார் வழங்கினார். உடனடியாக உட்பிரிவு செய்து பட்டா கிடைத்ததற்கு என். புது பட்டியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியும், அதிகாரிகளுக்கு பாராட்டும் , நன்றியும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மண்டல துணை தாசில்தார் சரவணன், தலைமை நில அளவையர் செந்தில்குமார் வருவாய் ஆய்வாளர்கள் பிரேமா , பிரியங்கா , அறிவழகன், சண்முகசுந்தரம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.