கோவில்பட்டி அருகே வெற்றிவேல் நகரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10.11. லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டட பணிகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டமங்களம் ஊராட்சிக்கு உள்பட்ட வெற்றிவேல் நகரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10.11. லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடப் பணிகளை முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன்,


மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,குத்தகைதாரர் தங்கராஜ், அதிமுக நிர்வாகிகள் முருகன், மனோகரன், பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
