BREAKING NEWS

உடுமலை அன்னபூரணி நகரில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா

உடுமலை அன்னபூரணி நகரில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா

உடுமலை அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடுமலை நகராட்சிகுட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது முன்பு இந்த பூங்காவில் பூ செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பூங்காவிற்குள் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.

அத்துடன் பூங்காவுக்குள் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் கிடைக்கிறது மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்தத் திட்டம் செயல் படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர் மண்டிக்கிடக்கிறது அதனால் இந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் உள்ளதாகவும் அவை அந்த பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் அதனால் இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி செடிகளை வளர்த்த நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )