திருப்பூர் அரசு பள்ளியில் மகனுக்கு அட்மிஷன் :மாவட்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டு.

அவிநாசி :மாவட்ட உரிமையியல் நீதிபதி, தன் மகனை, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி.
தன் மகள் மற்றும் மகனை, முதல் வகுப்பு முதல், அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
CATEGORIES திருப்பூர்