BREAKING NEWS

பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து ஒருவர் பலி 25 பேர் படுகாயம் தேனியில் பரபரப்பு.

பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து ஒருவர் பலி 25 பேர் படுகாயம் தேனியில் பரபரப்பு.

தேனி மாவட்டம் கூடலூரில்    மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில்  பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்த பாலம் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்  வாகனங்கள் ஒரு வழித்தடத்தில்  மட்டும்  செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நேற்று இரவு கூடலூர் பகுதியில் திடீர்  மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையோரத்தில்  மணல் சரிந்து உள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை காலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்தது இந்த பெரும் விபத்தில்   ஒருவர் உயிரிழந்தார். பேருந்தில்  பயணம் செய்த மற்ற 25 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )