ராகுல்காந்தியிடம் விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.எம்.எஸ் போஸ்ட் ஆபீஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,
மாவட்ட பொருளாளர் மெய்ஞ்ஞானமூர்த்தி தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டு அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து பேசினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மீது பொய் வழக்குபோடும் அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசை கண்டித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
CATEGORIES கருர்