BREAKING NEWS

16 மாவட்டங்களில் இடி, மின்னல் , சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.

16 மாவட்டங்களில் இடி, மின்னல் , சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் நிலவி வரும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். சென்னையில்  அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் அடுத்த  3 நாட்களுக்கு இலட்சத்தீவு பகுதி,கர்நாடகா,கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில்   மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று பலமாக வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )