திண்டுக்கல். மாவட்டத்தில் செம்பட்டி அருகே கூட்டுறவுக் கல்லூரி ஏற்படுத்தப்படும் அமைச்சர் இ. பெரியசாமி தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மங்கள் பவன் மஹாலில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் காந்தி நாதன் வரவேற்று பேசினார்.
மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை நிர்வாகி அன்புக்கரசன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு கட ன் வழங்கினார். அப்போது ஐ பெரியசாமி பேசியதாவது: –
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல் அமைச்சர்களில் ஒருவராக மு க ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். முதல்வரின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்படும் விதமாக பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளையும், கடன்களையும் வழங்கி வருகிறோம். அதன்படி கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்தவர்களின் நிலையில் சென்றிருந்தால் கூட்டுறவுத்துறை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்.
தமிழக முதல்வர் அவருடைய சீரிய நடவடிக்கையின் காரணமாக இன்றைக்கு இந்தியாவிலேயே மிகச்சிறந்த வகையில் கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையில் விவசாயத்தில் மட்டுமே கடன் வழங்காமல் பன்முகத் தன்மையோடு இன்றைய காலத்திற்கு ஏற்ப அனைத்து விதமான கடன்களும் வட்டி இன்றி வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை ஏற்படுத்தி இன்றைக்கு சுய உதவி குழுக்கள், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் என்ற வகையில் கடன் வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் கூட்டுறவுத் துறை சார்பாக அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே தொகையை தொகையில் அரசு கூட்டுறவுக் கல்லூரி செம்பட்டி அருகே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்து உள்ளோம் நிலக்கோட்டை தாலுகாவில் இன்றைக்கு மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய ரேஷன் கடை துவங்கி வைத்துள்ளோம்.
பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் விதமாக திண்டுக்கலில் இருந்து கன்னிவாடி வரை அரசு பெண்கள் பஸ்சும், இரண்டாவதாக திண்டுக்கலில் இருந்து ரெட்டியார்சத்திரம் வரை அரசு பஸ்சும் இன்னும் எண்ணிலடங்காத வகையில் எண்ணற்ற திட்டங்களை செய்து தர அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட்டு காட்டுகிறேன் என பேசினார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார், திண்டுக்கல் பாராளமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ . நாகராஜன், நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, நிலக்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முருகேசன், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நகர நிர்வாகி விஜய், மத்திய கூட்டுறவு வங்கி நிலக்கோட்டை கள அலுவலர் அன்பரசன், சரக மேற்பார்வையாளர் சின்ன சிதம்பரம் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்கள், வங்கி பொறுப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் ம.ராஜா