தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார்.

தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு, தன்னிச்சை அமைப்பான அமலாக்கத்துறையின் மூலம் விசாரணை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை விசாரிப்பதை கண்டித்தும், விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மூசாவுதீன், ஹூமாயூன் கபீர் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்