BREAKING NEWS

அதிர்ச்சி 25 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி பெற்றோர்களே உஷார்.

அதிர்ச்சி  25 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி பெற்றோர்களே உஷார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், கோவையில் 31 பேர் உட்பட 26 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இதுதவிர  12 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகள் ,  60 வயதுக்கு மேற்பட்ட 94 பேருக்கும் கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி தகவல் அறிக்கைகளை துல்லியமாக வெளியிடவேண்டும்.

மீறும் நிர்வாகங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி  தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அல்லது அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள  அறிவுறுத்தினாலோ உடனடியாக சுகாதாரத்துறை  தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )