எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேட்டி.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் என் கே பெருமாள்,தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னணியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற அலுவலத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முக்கிய தீர்மானமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை, பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, காந்தி என்ற காமாட்சி, செங்கான், லட்சுமண பெருமாள், சண்முகவேல், ஜவகர், தனவதி, தனஜெயன், மகேஷ், பால்ராஜ், நகரச் செயலாளர்கள் விஜயபாண்டியன், ராஜகுமார், ஆண்டி, மாரிமுத்து, கப்பல் ராமசாமி, வாசு முத்து, மாவட்ட துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மாவட்ட இணைச்செயலாளர் முருகேஸ்வரி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கோயில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் :
கட்சியில் மாற்றம் வர வேண்டும் என ஏற்கனவே நடைபெற்ற சென்னையில் நடைபெற்ற
அதிமுக கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை தான் வேண்டும் என கருத்துக் கூறி இருந்தோம்
அதிமுக என்றுமே ஒற்றை தலைமையில் தான் இருந்து வந்ததுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக அன்று தற்காலிகமாக பொதுக்குழுவில் இரண்டு தலைமையின் கீழ் இயங்கும் என செயல்பட்டு வந்தோம் ஆனால் இன்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது
மேலும் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியுடன் எதிர்க் கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது தமிழகத்தில்
எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒற்றைத் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது.
தலைமை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது அதனால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒரு தலைமையின் கீழ்
வரவேண்டும் என பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். ஜனநாயக கருத்து கூறுகிறார்.
இன்று இங்கு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைவருமே ஒத்த தலைமையை விரும்புகின்றனர்.


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானமான வந்தால்
அதற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் இனி ஒற்றை தலைமை தான் சரியான தீர்வு என ஏற்கனவே மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கூறி விட்டோம் ஒற்றை தலைமை வந்தால் தான் காக்க முடியும் பெரிய இயக்கத்தை நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை
பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு 30 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் அவர்கள் அனைவருமே ஒற்றைத் தலைமையை விரும்புகின்றனர் பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரம் இருப்பது ஒருங்கிணைப்பாளருக்கு நன்றாகவே தெரியும் எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது .
பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது அதான் இறுதி முடிவு அதிமுகாவில் முன்னாள் ஜெயலிதா மறைவிற்குப் பின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செஞ்சோம் அது பொதுக்குழு தான் ஏற்றுக் கொண்டது அதில் மாறுபட்ட கருத்து இல்லை பின்னர் அவர் சிறை தண்டனை பெற்றதும் அவர் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்ற நிலை வரும்போது அதே பொதுக்குழு தான் சசிகலாவை பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் இல்லை என்பதை தீர்மானம் நிறைவேற்றினோம் பின்னர் காலச் சூழ்நிலைக்கு ஏற்று இரட்டை தலைமை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைக் தலைமையை பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இப்போது என்ன பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருகிறார்களோ அது தான் இறுதியான முடிவு
தீர்மானம் நிறைவேற்றும்.
எந்த மாற்றுக் கருத்தும் இல்லை தற்போது சசிகலா அதிமுக கட்சியில் இல்லை அவரை ஓபிஎஸ் சந்திக்க மாட்டார் என நினைக்கிறோம் அவர் சந்தித்தாலும் அதிமுகவை பாதிக்காது இரட்டை இலை பிரச்சினையே கிடையாது பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் கட்சிக்கும் இரட்டை இலைக்கும் எந்த பிரச்சனையும் எள்ளளவும் வராது எனக் கூறினார்..
