கும்பகோணம் அருகே ஐடி ஊழியர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது அடிபட்டு சம்பவ இடத்தில் பலி.

கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் மாத்தி கேட் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கோபிநாத் (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தோற்று காரணமாக கோபிநாத் வீட்டிலிருந்து பணி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலைய காவல் எல்லைக்குட்பட்ட, தாராசுரம் – கும்பகோணம் ரயில் நிலைய எல்லையில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் வந்த ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் வண்டியில் கோபிநாத் தண்டவாளத்தை கடக்கும் பொழுது அடிபட்டு சம்பவ இடத்தில் இறந்துள்ளார்.
விபத்து குறித்து ரயில்வே அதிகாரி கொடுத்த தகவலின்பேரில், ரயில்வே டிஎஸ்பி மகாதேவன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மேற்பார்வையில், எஸ்ஐ சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.