BREAKING NEWS

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.1/2 சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.1/2 சதவிகிதம் மட்டுமே வழங்கபடுவதாகவும் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல் தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார் A.M.ராஜா.

எஸ்.சி,  எஸ்.டி  பிரிவினருக்கு  வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.1/2  சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.1/2 சதவிகிதம் மட்டுமே வழங்கபடுவதாகவும்  பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல் தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார்  A.M.ராஜா.

சென்னை ஐஐடி யில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வழங்க வேண்டிய இருபத்தி இரண்டரை சதவிகிதம் வேலைவாய்ப்பை வழங்காமல், வெறும் இரண்டரை சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், உயர் சாதியினருக்கே பேராசிரியர், உதவி பேராசிரியர், பணியிடங்கள் வழங்கப்படுவதாகவும், தலித் அமைப்பினர் கொடுத்த புகாரை ஐஐடி நிறுவனம் கண்டுகொள்ளாததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி விரிவான தகவல் கேட்டதையடுத்து, மத்திய தகவல் ஆணையர் அமித்தா பாண்டே விரைவில் தகவல் தருவதற்கு உத்தரவிட்டுள்ளதாக தலித் ஆக்சன் கமிட்டியின் பொதுச்செயலாளர் தகவல்:

சென்னையில் இயங்கி வரும் உயர் கல்வி நிறுவனமான ஐஐடி யில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.1/2 சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.1/2 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டு

பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதில் முறைகேடு நடைபெறுவதாகவும், உயர் சாதியினருக்கே பணி வழங்கப்படுவதாகவும் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால்

தலித் ஆக்சன் கமிட்டி எனும் அமைப்பின் பொதுச்செயலாளர் A.M.ராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதையடுத்து இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையில் ஐஐடி பதிவாளர் திருமதி. ஜானே பிரசாத், மத்திய தகவல் ஆணையர் அமித்தா பாண்டே, தலித் அமைப்பின் பிரதிநிதி A.M.ராஜா ஆகியோர் பங்கேற்ற விசாரணையில் மத்திய தகவல் ஆணையர் சென்னை ஐஐடி நிறுவனம் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல் தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார் A.M.ராஜா.

 

சென்னை ஐஐடி யில் பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு விடம் புகார் மனு கொடுத்துருப்பதாகவும் A.M.ராஜா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )