பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் .

இந்திய மல்யுத்த கூட்டமைப்பானது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நியமித்துள்ளது.
புதிய பொறுப்பேற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பத்மராஜா சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கு வருகை தந்தார். அவருக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பத்மராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் ;-
இந்திய மல்யுத்த தலைவராக நியமித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய இளைஞர்களின் மல்யுத்த கனவை உலக அளவில் எடுத்துச் செல்ல பிரதமர் மோடி புதிய உத்வேகத்துடன் கொண்டு வர அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளார்.
கிராம மற்றும் நகரத்தில் உள்ள இளைஞர்களின் மல்யுத்த கனவை நிறைவேற்ற பிரதமர் முயற்சி எடுத்து வருகிறார். பிரதமரின் முயற்சிக்காக அயராது தான் பாடுப்படுவேன். கிராமபுற இளைஞர்கள் அனைவருக்கும் திறமையான உடற்பயிற்சி ஆக்கபூர்வமான சிந்தனைகள், திட்டமிடுதலை உருவாக்கி மற்ற போட்டிகளான கராத்தே, கபாடி போல் கொண்டு வருவோம்.
முதன் முதலில் தமிழகத்தில் தான் மல்யுத்தம் தோன்றியது. தற்போது மல்யுத்தத்தை மக்கள் மறந்து this விளையாட்டுக்கு இளைஞர்கள் சென்று விட்டனர். இளைஞர்களின் உடலை வலுவாக்கி சிறந்த மல்யுத்த வீரராக உருவாக்க வேண்டும் என்பதற்காககிராமபுற இளைஞர்களுக்கு மல்யுத்த பயிற்சியை மேற்கொள்ள அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையம் அமைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்கள் விரைவில் அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையம் அமைக்கப்படும்,
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் தான் மல்யுத்த விளையாட்டு பிரபலமாக இருக்கின்றன ஆனால் இந்தியாவில் 4 மாநிலங்களில் மல்யுத்தமே இல்லை. உலக அளவில் 185 நாடுகளில் மல்யுத்தம் விளையாட்டு உள்ளது.கராத்தே பதில் மல்யுத்தத்தை இந்தியா முழுவதும் கொண்டு வர பிரதமர் மோடி அவர்கள் உறுதியாக உள்ளார். கராத்தே மூலம் சினாவிற்கு மாதத்திற்கு ரூ.320 கோடி வருமானம் சென்றுக்கொண்டிருக்கின்றன.
இதனை தடுக்கவே பிரதமர் மோடி மல்யுத்தத்தை பிரபலபடுத்த உள்ளதாக தெரிவித்தார் பேட்டியின்போது மகிழ் உணவு சிறுதானிய தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்