நாமக்கல் லாரித்தொழில் நலிந்து வருகிறதா? ஒரு பார்வை.

டிரான்ஸ்போர்ட் சிட்டிகள் எனும் நாமக்கல் – திருச்செங்கோடு இரட்டை நகரங்கள் இருக்கும்
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்துவந்தன. ஆனால், நாளடைவில் மழை பொய்த்துப்போன காரணத்தால், விவசாயிகள் மாற்றுத் தொழிலைத் தேடத் தொடங்கினர். இவர்களில் ஒருபிரிவினர் லாரி தொழிலையும், மற்றொரு பிரிவினர் முட்டைக் கோழி தொழிலையும் தொடங்கினர். இந்த மாவட்ட மக்களின் கடுமையான உழைப்பு காரணமாக, இந்தியாவே நாமக்கல்லைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு இந்த இரண்டு தொழில்களும் வளர்ந்தன.
நாமக்கல் நகரில் கடந்த 1946-ஆம் ஆண்டில் சிலர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு லாரியை வாங்கி உள்ளனர். அந்த லாரியில் அவர்களே ஓட்டுநர்களாகவும் பணியாற்றியுள்ளனர். பின்னர், அவர்களைப் பார்த்து சிலர் லாரி தொழிலுக்கு வந்துள்ளனர். படிப்படியாக லாரி தொழில் இந்த மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது.
கடந்த 1960-ஆம் ஆண்டு முதல் இந்த தொழில் நாமக்கல் மாவட்டத்தில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக லாரி பாடி பில்டிங், கூண்டு கட்டும் தொழில், மெக்கானிக் பட்டறைகள் பெயிண்ட் பட்டறைகள், கண்ணாடி கடைகள், ஆட்டோ மொபைல் , ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், லாரி புக்கிங் ஆபீஸ் என அதனைச் சார்ந்த தொழில்களும் படிப்படியாக வளர்ச்சி அடையத் தொடங்கின. பின்னர், லாரி தொழிலில் ஈடுபடுவோருக்கு உதவ லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் தொடங்கப்பட்டன.
தற்போது தமிழக அளவில் 6 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்டவை லாரிகள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் லாரிகள் உள்ளன.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்,
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம்,
தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்,
நாமக்கல் டிரெய்லர் அசோசியேஷன் போன்ற சங்கங்கள் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
அதேபோல திருச்செங்கோடு நகரில் நிலத்தடி நீரை குடிநீராக்கும் போர்வெல் அமைக்கும் போர்வெல் லாரி உற்பத்தியும் அதை சார்ந்த தொழில்களும் பெருமளவில் வளர்ந்து தற்போது அங்கு வண்டி உரிமையாளர் சந்தமும் பலமாக இருந்து வருகிறது
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனைத்து சரக்குகள், பெட்ரோலியப் பொருள்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் எடுத்துச் செல்வது 80 சதவீதத்துக்கும் மேல், லாரிகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
லாரி தொழிலை 60 சதவீதத்தினர் கல்வி அறிவு இல்லாதவர்கள்தான் நடத்துகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் துறையாக இருப்பதால், பல லட்சம் குடும்பங்கள் இத் தொழிலை நம்பி வாழ்கின்றன.
சில ஆண்டுகளாக லாரி போக்குவரத்து தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளில் வந்த சுங்கச்சாவடி அதன் கட்டணங்கள் சுங்கச்சாவடிகள் காலாவதியாகும் தொடர்ந்து பரிவசம் செய்வது டீசல் பெட்ரோல் விலைகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவது உள்ளிட்ட பிரச்சனைகளாலும், அவ்வப்போது ஸ்பீடு கவர்னர் உள்ளிட்ட பிரச்சனைகள் வந்து போவதும் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இந்தியாவும் முழுமைக்குமே ஆங்காங்கே போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஒரு சில இடங்களில் காவலர்கள் என்று அவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்து கொண்டு இருந்தாலும்,
இந்த தொழிலை இவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சமாளித்து நடத்திக் கொண்டு வந்துவிட்டனர் தற்போது டீசல் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வும் இவர்களை மிகவும் பாதித்த இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் இன்னும் பெட்ரோல் டீசல் விலை களையும் வகையில் வரிகளையும் உற்பத்தி வரிகளையும் லாரி பாடி கட்டும் அதில் உள்ள வரிகளை குறைத்து சலுகை காட்டாவிட்டால் இந்த தொழிலானது நாமக்கல்லில் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே நாமக்கல் மாவட்டத்தில் லாரி லாரி தொழிலில் நிலைத்து விடாமல் காப்பாற்ற படுவதற்கு இவர்களின் அனைத்துப் பிரச்சனைகளிலும் நேரடியாக ஆய்வு செய்து இவர்கள் பிரச்சனை அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் இதில் முனைப்பாக இறங்கி செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார் லாரி தொழிலுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதை மத்திய மாநில அரசுகள் இதுவரை சரியாக கவனிக்கவில்லை இவர்கள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பதே இல்லை இவர்கள் பிரச்சனைக்காக நடந்துக்கொண்ட 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது இவர்கள் மத்தியில் வந்து திமுகவைச் சேர்ந்த கனிமொழி பேசினார் இவர்களின் கூட்டணியைச் சேர்ந்த கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தற்போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர் .ஈஸ்வரன் வந்து நேரடியாக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்.
அதேபோன்று இவர்களின் கோரிக்கையை அனைத்தையும் நிறைவேற்றி வைக்க தான் உறுதியை மேற்கொண்டிருப்பதாகவும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கக் கூடிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே ஆர் என். ராஜேஷ் குமாரும் லாரி உரிமையாளர் சங்கம் முன்பு தங்களின் திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் என்று உறுதியளித்திருக்கிறார் இவைகள் அனைத்தும் ஒன்றொன்றாக விரைந்து நடைபெறுமா ? என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.