சந்திராயனில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விண்வெளி அனுப்புவதற்கான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தூத்துக்குடியில் பேட்டி.

தூத்துக்குடி : சந்திராயனில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விண்வெளி அனுப்புவதற்கான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் சிறிய ரக ராக்கெட் ஏவுதலத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதலம் அமைக்க 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் மண் பரிசோதனை நடைபெறும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தூத்துக்குடியில் பேட்டி.
கல்லூரி கனவு என்ற பெயரில் பிளஸ்2 படித்து முடித்துவிட்டு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இஸ்ரே முன்னாள் தலைவர் சிவன், ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி கனவு என்ற திட்டத்தை துவங்கி வைத்தனர். இதை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அளித்தார். அப்போது சந்திராயன் விண்வெளிக்கு அனுப்புவதில் சில குறைகள் உள்ளன அந்த குறைகளை சரி செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த குறைகள் சரி செய்யப்பட்ட பின்னர் விரைவில் இஸ்ரோ சந்திராயன் அனுப்பப்படும் என்றார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து அதற்காக சுமார் 2700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இதில் 80% பணிகள் முடிவு பெற்றுள்ளன மேலும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட் ஏவப்பட உள்ளது.
சர்வதேச அளவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதலமாக இந்தியா உள்ளதால் குலசேகரபட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவப்படும் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின் மண் பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் ராக்கெட் ஏவுதளம் பணிகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.