BREAKING NEWS

மாமன்னர் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா! தஞ்சாவூர்,ஜூன்.30 – தஞ்சாவூரில் மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டப்பட்டது.

மாமன்னர் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா! தஞ்சாவூர்,ஜூன்.30 – தஞ்சாவூரில் மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டப்பட்டது.

தஞ்சாவூரை ஆண்ட மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக நேற்று காலை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் ஆக்கப்பணிகள் என்ற தலைப்பில், செம்மொழித் தழிழாய்வு மைய நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் சுந்தரமூர்த்தி பேசி, கருத்தரங்கத்தை துவக்கி வைத்தார். இதில், ஏழு தலைப்புகளில் கருத்தரங்கத்தில் பேசினார்.

தொடர்ந்து, அரண்மனை வளாகத்தில் உள்ள சரபோஜியின் பளிங்குச் உருவச்சிலைக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்,  துணை மேயர் அஞ்சுகம் பூபதி,  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை இளவரசர், நிர்வாக அறங்காவல் சிவாஜிராஜா து.போஸலே, நாக்பூர் மகாராஜா முத்தோஜி மகராஜ் போஸலே, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா சி.போன்ஸ்லே, அரசு தலைமை கொரடா கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பின்னர், மன்னர் இரண்டாம் சரபோஜியின் கலை அறிவியல் மேதை என்ற தலைப்பில் டாக்டர் நரேந்திரன் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டன.

புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது; வரலாற்றில் ஒரு பதிவை பதிவித்து விட்டு சென்றவர் மன்னர் இரண்டாம் சரபோஜி. தஞ்சாவூரின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் மக்கள் சேவை ஆற்றினார். அவரின் ஆளுமைக்குட்டப்பட்ட பகுதியில் 25 ஆயிரம் தான் மக்கள் தொகை இருந்தது. அவர் மறைந்த பிறகு இறுதி ஊர்வலத்தில் 90 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.

அந்த அளவிற்கு அவரின் புகழ் பரவி இருந்தது. சரஸ்வதி மஹால் நுாலகத்தை பொறுத்தவரை நுாலக குழு கூட்டம் நடத்த வேண்டும், பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நிச்சயம் இதற்கு தீர்வு காணப்படும். முதல்வர் நுாலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழகத்தில் இலக்கிய திருவிழா, புத்தக கண்காட்சி போன்றவற்றைக்கு 5.6 கே்ாடி ரூபாயை நிதியை ஒதுக்கியுள்ளார்.

சரஸ்வதி மஹால் நுாலக வளர்ச்சிக்கு தேவையான அனைத்து செய்து தரப்படும். கட்டிடங்களுக்கு மன்னர் காட்டிய முக்கியத்துவம் சரஸ்வதி மஹால், மனோரா போன்றவற்றை பார்த்தால் அறிந்துக்கொள்ள முடியும். அவரின் நிர்வாகத் திறமையால், பல்வேறு துறைகளை உருவாக்கி மக்களின் தேவையை அறிந்து செயல்பட்டார். மாணவர்கள் வாழ்வில் ஒருநாளாவது சரஸ்வதி மஹால் நுாலகத்திற்கு வர வேண்டும். கல்விக்கும்,நுால்களுக்கு பரைசாற்றும் விதமாக சரஸ்வதி மஹால் விளங்கி வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கருத்தரங்கத்தை துவக்கி வைத்து சுந்தரமூர்த்தி பேசியதாவது; சரபோஜி மன்னர் தமிழ் மொழிக்கும், நுாலகத்திற்கும் ஆற்றிய பணிகள் நிறைய உள்ளது. சரஸ்வதி மஹால் நுாலகத்தில் ஏரளமான பல்வேறு மொழிகளின் சுவடிகள், அரிய நாணயங்கள், அரிய நுால்கள் என பலவற்றை சேகரித்து வைத்திருந்தார். சரஸ்வதி மஹால் நுாலகம் கலைகளுக்கு ஒரு ஆவணமாக, வரலாற்றிக்கு சிறந்த பங்களிப்பை செய்த ஒரு மாளிகையாக, பல்வேறு கலைகளையும் போற்றி விளங்கியதை நாம் பார்க்கலாம்.

சரஸ்வதி மஹால் நுாலகம் ஒரு பல்கலைகழகம். அந்த பல்கலைகழகத்தில் வரலாறு, வாழ்வியல், இசைகலைகள், தாவரவியல் பற்றிய குறிப்புகள், ஆவணங்கள் உள்ளது. சரபோஜி மன்னர் பல மொழிகளை அறிந்தவர். நுால்களை படித்து படித்து, அதை பற்றி சிந்திக்கொண்டே இருக்ககூடிய கலைஞர். படித்த நுால்கள் அடுத்த தலைமுறைக்கு சேர வேண்டும் என்ற சிந்தனை மிக்கவார்.

சரஸ்வதி மஹால் நுாலகம் அள்ள அள்ள குறையாத கருவூலகமாக உள்ளது. அறிஞர்கள் அந்த நுாலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மன்னர் சரபோஜி தனது மகளின் திருமணத்திற்கு சீர்வரிசையாக, நுால்களை வழங்கினார். தன்னுடைய பொருள் செல்வத்தை கல்வி செல்வமாக மாற்றினார். நுால்களோடு கலந்து வாழ்ந்துள்ளார். மக்களின் கல்விக்காக பெரிய திருப்புமுனையை செய்துள்ளார்.

வேதங்களையும் தாண்டி, ஆறு மொழிகளை கற்றுக்கொள்ள பள்ளிகளை நிறுவினார். பெண்கள் ஆசிரியராக இருந்தால் அவர்களுக்கு தனி சம்பளம் வழங்கப்பட்டது. வட மொழி, தமிழ் மொழி இலக்கணங்களை மாணவர்களுக்கு கற்பித்துள்ளார் இவ்வாறு அவர் பேசினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )