திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் மதுரையில் இருந்து சின்னமனூர் சென்ற தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில் பத்துக்கு மேற்படபயணிகள் படுகாயம் காவல்துறையினர் விசாரணை.

மதுரை ஆரப்பாளையத்திலிருந்து வாடிப்பட்டி,பள்ளபட்டி,நிலக்கோட்டை,வத்தலக்குண்டு,தேனி வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சின்னமனூருக்கு சென்ற தனியார் பேருந்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் பலத்த சத்தத்துடன் மோதி,
பத்தடி ஆலமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது பேருந்தில் பயணம் செய்த மதுரை பைக்காராவைச் சேர்ந்த அங்கயர்கண்ணி(40),மதுரை கூடல்புதூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி(25),உமாமகேஷ்வரி(32),கோரிப்பாளையத்தை சேர்ந்த முஹமதுஹாரிஸ்(31), சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ராஜகுரு(42),மதுரைஅண்ணா நகரைச் சேர்ந்த ஜோதிமணி(50) உட்பட 10-க்கும் பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து நடந்த பஸ் மீது உயர் அழுத்த மின்சார வயர்கள் சுற்றப்பட்டு இருந்தது இருப்பினும் பஸ் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 40க்கு மேற்பட்ட பயணிகள் அதிஸ்ட்ட வசமாக உயிர் தப்பினர் சம்பவம் குறித்து அமையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலெட்சுமி சார்பு ஆய்வாளர் விஜயபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் ம.ராஜா