கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் குருவை சாகுபடியில் பணிகள் டெல்டா மாவட்ட முழு வீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருவதாகவும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும.
, கூடுதல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆன நிலையிலும் மேட்டூரில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறப்பதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை குடுவையில் முகர்ந்து குடிக்கும் அளவிற்கு தான் தண்ணீர் செல்கிறது என்பதை உணர்த்தும் வகையில் கையில் குடுவையுடனும் உரத்தட்டுப்பாடு உரவிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தி சாக்கு அணிந்தும் கரும்பு நிலுவை தொகை உடனடியாக பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்து கையில் கரும்புடன் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள் வேளாண் விற்பனை மையங்களில் குருவை தொகுப்பு திட்டத்திற்கு மட்டுமே உரங்கள் வழங்கப்படுவதால் மற்ற அனைவரும் தனியார் விற்பனை கடையை நாடி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி செயற்கை உரத் தட்டுப்பாட்டை உண்டாக்கி உரவிலையை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டியவர்கள் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் பருத்தி கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும் வேண்டுகோள் வைத்தனர்.