BREAKING NEWS

உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக 4 ம் ஆண்டு விழா.

உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக 4 ம் ஆண்டு விழா.

கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே செங்குளத்தின் கரையில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக 4 ம்ஆண்டு விழா வெங்கடேச பெருமாளின் அவதார உற்சவ விழாவாக இரண்டு நாட்கள் நடந்தது.

வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த கோவில் வளாக சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார் லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி பெருமாள் கருட ஆழ்வார் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்டி யினரின் பஜனையும் பிருந்தாவனம் நிகழ்ச்சியும் நடந்தது.

வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் நான்காம் ஆண்டு விழாவை ஒட்டி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை ஹோமம் நவகலச ஸ்தாபிதம் வெங்கடேச பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சியும் புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய பெருமாள் திருமொழி நூல் வெளியிடப்பட்டது தொடர்ந்து காலை 11 மணிக்கு விசேஷஅலங்கார பூஜை மஹா தீபாராதனையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர் வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இராமகிருஷ்ணன். அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்து இருந்தனர். இதில் உடுமலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )