பவானி ஊராட்சி கோட்டையில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பாக பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் முத்தரப்பு ஒப்பந்தத்தினை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பாக பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோபி கோட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் முத்தரப்பு ஒப்பந்தத்தினை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய ஆளுங்கட்சியால் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி அரசாணை எண் 100ன் வாயிலாக தொழிலாளர்கள் அலுவலர்கள் பொறியாளர்கள் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இது நாள் வரை நிறைவேற்றப்படாத கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு திட்ட தலைவர் சதீஷ் பவானி கோட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
