BREAKING NEWS

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மாவட்ட 26வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருண் சுமங்கலி மஹாலில்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் விவசாயத்திற்கும், ஏழை, அடித்தட்டு மக்கள் குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரத்தை வழங்கி சேவை செய்து வரும் சேவை துறையாம் மின் துறையை தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும், மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தினக்கூலியாக ரூ 380ஐ வாரியமே நேரடியாக வழங்கி படிப்படியாக நிரந்தர படுத்த வேண்டும்,

கேங்மேன் பணியாளர்களின் பயிற்சி காலத்தை 3 மாதங்களாக குறைத்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்.
மின்வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்,  லால்குடி கோட்ட இணைச் செயலாளர் இருதயராஜ் பெருநகர் வட்ட துணைத்தலைவர் பழனியாண்டி
மாநில செயலாளர் உமாநாத், பெருநகர் வட்ட இணை செயலாளர் நடராஜன், கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )