அமராவதி நகர் சைனிக் பள்ளி வைரவிழா வில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 16 ம் தேதி உடுமலை வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி நகர் சைனிக் பள்ளியில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளபள்ளி வைர விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

உடுமலை அடுத்துள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டி வரும் 16ம் தேதி வைர விழா கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது இந்த விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர். மு க ஸ்டாலின் உடுமலை வருகிறார்.
இதனை ஒட்டி உடுமலை நகரில் பழனி பொள்ளாச்சி சாலையில் மைய பகுதியில் படிந்துள்ள மண்ணை அகற்றியும் செடிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. இந்த பணியில் 15க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
