திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம் .

உடுமலை மத்திய பேரூந்து நிலையத்தின் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்று வருகிறது. உடுமலை நகர தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமை வகித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதை கண்டித்தும், லாக் லப் மரணங்களை தடுத்து நிறுத்தக் கோரியும் திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். பேராசிரியர் பி.கனகசபாபதி, கர்ணல் பாண்டியன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்ட பொதுச் செயலாளர் ஆடிட்டர் ஏ.வடுகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.