கோவில்பட்டி அருகே ஈஷா யோகா மையம் காவேரி கூக்குரல் சார்பில் பத்தாயிரம் மரக்கன்கள் நடும் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன்தேவர்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் எஸ்.எஸ்.எஸ் பசுமை கார்டனில் தரிசு நிலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் ஈசா யோகா மைய காவேரி கூக்குரல் சார்பில் சந்தன மரம் செம்மரம் தேக்கு மரம் உள்ளிட்ட பத்தாயிரம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டி தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழை பெய்யவும், காற்று மாசினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்படுவதாகவும், இதன்மூலம் இப்பகுதி பசுமை நிறைந்து சோலைவனம் போன்று காணப்படும் எனவும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி மாவட்ட குழு தலைவி சத்யா, ஒன்றிய செயலாளர் அய்யா துரை பாண்டியன், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், தோணுகால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட லட்சுமி, தேவர்களும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணன்,எஸ் எஸ் எஸ் பசுமை கார்டன் உரிமையாளர் வசந்தி கார்த்திக், தோட்டம் வடிவமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரகுராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,
கிளைச் செயலாளர் பொன்ராஜ், ஈஷா மையம் ஒருங்கிணைப்பாளர் சசிராஜன்,ஈஷா மையம் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லிங்கதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தோணுகால் பஞ்சாயத்து பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்படும் நீர் தேக்க தொட்டி பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.