ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பவானி மேட்டூர் மெயின் ரோடு தாலூக்கா அலுவலகம் அருகில் திமுக அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் செவ்வாய் கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமை வகுத்தார். மாவட்ட பொருளாளர் டி.எம்.ஆர். செல்வம், மாநில மகளிர் அணி துணை தலைவர் வித்யா ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ், சரவணன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாநில செயலாளர் மலர்கொடி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் குமார், சித்தி விநாயகன், அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இறுதியாக பவானி நகர தலைவர் நந்தகுமார் நன்றி கூறினார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்