நமது வார்டு நமது மேயர் திட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட மேயர்சன் ராமநாதன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் போது அவர்களுக்கு உரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தினமும் நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின் கீழ் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று மாநகராட்சி 22 வது வார்டில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆபிரகாம் பண்டிதர் தெருவில் ஆய்வு தொடங்கிய மேயருக்கு வார்டு கவுன்சிலர் சத்தியா விரையன் மண்டல தலைவர்கள் ரம்யா சரவணன் s.c.மேத்தா உள்ளிட்டவர்கள் சாலை அணிவித்து வரவேற்று வார்டின் அனைத்து பகுதிக்கும் அனைத்து சென்றனர் செயற்பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்தனர்.

அப்போது தூர்ந்து கிடந்த சாக்கடைகளை உடனடியாக சரி செய்ய மேயர் உத்தரவிட்டார் மேலும் அந்த பகுதிகளில் பெண்கள் தங்கள் பகுதியில் பதினைந்து வீடுகள் அகற்றப்பட உள்ளது அதற்கு மாற்றிய இடம் வழங்க வேண்டும் என கேட்டனர் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் போது எந்த பொது மக்களும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்களுக்கு மேயர் நம்பிக்கை ஊட்டினார்.
