‘அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை… நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை…ஆனால்?: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் யாருக்கேனும் தடையோ அல்லது நிவாரணமோ தேவைப்பட்டால் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.
CATEGORIES முக்கியச் செய்திகள்