தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளம் ஒன்றியம் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் வைரக்கண் தலைமையில் நடந்தது. ஓட்டுநர் பிரிவு மாநில செயலாளர் ராமநாதன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் மரகதசெல்வி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மரகதசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அவைத்தலைவர் பாக்கியமுத்து, நவநீதகிருஷ்ணபுரம் செயலாளர் சுப்பையா வரவேற்றார் தென்காசி மாவட்ட செயலாளர் மகேஷ் சிறப்புரை நிகழ்த்தினார் சுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் யோசேப்பு ராஜமணி, கருவந்தா செயலாளர் பாலசுப்பிரமணியன், கீழ கருவந்தா காளிச்சாமி,
மற்றும் மாரியம்மாள், மயில்ராஜ், முருக செல்வம், துரைராஜ், முப்பிடாதி, மாடசாமி தேவர், வெள்ளையம்மாள், மாடத்தி, செந்தூர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் சின்னம்மா சசிகலாவை அ.இ.அ.தி.மு. கழகத்திற்கு நிரந்தர பொது செயலாளராக நியமனம் செய்திட தொண்டர்கள், அனைவராலும் ஏகமனதாக தீர்மனம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், ஒட்டுநர் பிரிவு மாநில செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
