மயிலாடுதுறை மாவட்டம், அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கடக்க ஊராட்சி, அகராதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய பள்ளி மேலாண்லாமைக்குழு தலைவராக ஜான்சிராணி, உபதலைவர் செந்தமிழ்செல்வி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்ட அழைப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐரீன் ஜெயராணி வரவேற்று பேசினார். பார்வையாளராக குத்தாலம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி மேற்பார்வையாளர் ( பொறுப்பு) குலசேகரதாஸ் கலந்துகொண்டார். உள்ளாட்சி பிரதிநிதிகளாக கஞ்சமலை, சுதாமாரியப்பன் ஆகியோர் தேர்த்தெடுக்கப்படனர். மகளிர் சுய உதவிக்கும் தலைவி சுகன்யா, இல்லம் தேடிக்கல்வி சார்பாக சாராதா பீரீத்தா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.