நெல்லை மாவட்டம் இடையன்குடியில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.

திசையன்விளை, இடையன்குடியில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் ஆர்.என்.ஜெகதீசன் தலைமை யில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் டி.வி.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் எஸ்.பி. தமிழ் செல்வன்,மாவட்ட பொருளாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி.அணி தலைவர் நரேந்திர பாலாஜி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் எஸ்.அசோக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார் கள்.
கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 30பெண்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. மாற்று கட்சியிலிருந்து ஏராளமான பேர்பா.ஜ.க.வில் சேர்ந்தனர். அவர்களுக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.பால்சாமி, முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து தலைவர் ஆனந்த குமார், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கேசவன்,ஒன்றிய பொறுப்பாளர் கள் டி.சேகர்,,வி.ராஜன்,, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் லிவியா சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் அரி முத்தரசு,ஒன்றிய பொதுச்செயலாளர் கள் பி.கோபால்,எம்.குமரேசன், ஒன்றிய பொறுப்பாளர் நவீன் செல்வகுமார்,மீனவர் அணி அஜித் குமார் கூடன்குளம் பாரத்கேஸ் டீலர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஏ.கே.கமலேஷ், பஞ்சாயத்து குழு தலைவர் எஸ்.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.