தன்னிச்சையாக முடிவெடுத்த ஆளுநர்… கொந்தளித்த அமைச்சர் பொன்முடி: பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கா. பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா மேடையினை பாஜகவின் பிரச்சார மேடையாக பயன்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மதுரை வருகை தர உள்ளார். மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
