தஞ்சாவூர் 5 வது புத்தகத் திருவிழா வருகிற 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான பப்பாசியுடன் இணைந்து 5 வது புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளது.

வருகிற 15ஆம் தேதி மாலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் வருகிற 25ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில், 134 அரங்குகள் அமைக்கப்பட்டு 50,000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த,

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாணவர்கள் வாசிப்புத்திறனை பழக்கப்படுத்திக் கொள்ள இந்த புத்தகத் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களும் இந்த புத்தகத் திருவிழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் தினமும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்
பேட்டி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். தஞ்சை மாவட்ட ஆட்சியர்
