BREAKING NEWS

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்.

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்.

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம், வடமதுரை, பழனி, சாணார்பட்டி, அஞ்சு குளிப்பட்டி, வேம்பார் பட்டி, செங்குறிச்சி, நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதனால் இங்கிருந்து வாரந்தோறும் வெளி மாநிலங்களுக்கு லாரி மூலம் தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தேங்காய்களை உரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றி வேம்பார்பட்டி தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:-

சாணார்பட்டி, அஞ்சுகுளிபட்டி, சிலுவத்தூர், செங்குறிச்சி, நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு சென்று விவசாயிகளிடம் தேங்காய் தரத்திற்கு ஏற்ப விலைபேசி, அதனை இங்கு கொண்டுவந்து உரிக்கிறோம்.அதனை 4 ரகமாக பிரித்து மூட்டைகளாக ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் ஏற்றுமதி செய்கிறோம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் 40,000 க்கும் மேற்பட்ட தேங்காய்கள் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.இங்கு தேங்காய்க்கு சரியான விலை கிடைக்காததால் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த வருடம் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே திண்டுக்கல் பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )