ஸ்ரீவைகுண்டம் அருகே வாகனங்கள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் திருநெல்வேலியில் இருந்து படுக்கப்பத்திற்கு செல்லும் தனியார் பேருந்தையும் குற்றாலம் செல்வதற்காக வந்த டூரிஸ்ட் வேனின் முன்பக்க கண்ணாடியையும் மர்ம நபர்கள் சிலர் கம்பு மற்றும் கற்களை கொண்டு தாக்கி முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் நப்பினர். சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் ராமகிருஷ்ணன் மற்றும் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் பரமசிவன் ஆகியோர் ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற போராட்டம் எதிரொலியாக வாகனங்கள் உடைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமைலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
