BREAKING NEWS

கரோனாவில் இருந்து நலம் பெற்றார் ஸ்டாலின் : குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கையும் பதிவு செய்தார்!

கரோனாவில் இருந்து நலம் பெற்றார் ஸ்டாலின் : குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கையும் பதிவு செய்தார்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், லேசான சளி மற்றும் இருந்ததால், 14-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டே தனது அன்றாட அலுவல் பணிகளையும் ஸ்டாலின் கவனித்து வந்தார்.

 

 

இந்த சூழலில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து காலையில் டிஸ்சார்ஜ் ஆனார். பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசு தலைவர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய குடியரசு தலைவரைத் தேர்வு செய்ய உள்ளனர்.

 

 

சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கினை முதல்வர் ஸ்டாலின் செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வாக்களித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )