BREAKING NEWS

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் குறையாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். அவருக்கு நுரையீரலில் 10 சதவீத அளவுக்கு சளி பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர்.

 

 

உடனே ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது. முழுமையாக குணம் அடைந்ததைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் மேலும் ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )