அந்தியூரில் தனியார் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இறந்ததால் ஏற்பட்ட கலவரம் காரணமாக,
இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் IPS மற்றும் பவானி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் IPS உத்தரவின் பேரில் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,
இயங்கி வரும் ஆதர்ஸ் பள்ளி. கல்லூரி. மங்களம் பள்ளி. நக்கீரன் பள்ளி. மற்றும் பிற தனியார் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்