சாலையில் பையுடன் பணம் சிதறி கிடந்துள்ளது. பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கைப்பற்றி விசாரணை செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சரகத்திற்கு உட்பட்ட பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோணி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
பேரையூர் சேகநாதபுரம் அருகே சாலையில் பையுடன் பணம் சிதறி கிடந்துள்ளது. பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கைப்பற்றி விசாரணை செய்து வந்தார். சென்னையை சேர்ந்த முஸ்தபா கமல் குடும்பத்தினர் பேரையூர் அருகே சேகநாதபுரம் கிராமத்தில் கந்தூரி விழாவிற்கு வந்துள்ளனர்.
அப்போது பணத்தை தவறிவிட்டதாக கூறியுள்ளார். முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு தலைமையில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோணி, காவலர் கலைச்செல்வம் ஆகியோர் ரூ.10500 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். தொலைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பயிற்சி துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோணி, மற்றும் காவலர் கலைசெல்வம் ஆகியோரை காவலர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.