காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு பவானி நகர திமுக மீனவரணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

பவானி நகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டு பசுவேஸ்வரர் வீதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அவர்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வினைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று பவானி நகர திமுக மீனவர் அணி சார்பில் முன்னாள் கவுன்சிலர் கவிதா சந்திரன் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ நகர்மன்ற துணைத் தலைவர் மணி கவுன்சிலர் பாரதி, திமுக கட்சி நிர்வாகிகளான ராஜசேகர் சண்முகசுந்தரம் 20 வது வார்டு செயலாளர் விஜயகுமார் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்