உடுமலை தாராபுரம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயால் சுகாதாரக்கேடு.

உடுமலை தாராபுரம் மெயின் ரோட்டில் யு எஸ் எஸ் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பகுதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பாம்புகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது மேலும் கால்வாய் பகுதியில் காட்டுச் செடிகள் புதர் போல் வளர்ந்து உள்ளதால் சாக்கடை நீர் வழிந்தோட வழியில்லாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பகுதி பகுதி மக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.